முகப்பு
இந்தியா

'இரு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை; வதந்திகளை நம்ப வேண்டாம்' - அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

கரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் அவரது மனைவி இன்று போட்டுக்கொண்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
பகிர்:

கரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் அவரது மனைவி போட்டுக்கொண்டனர். 

அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் அவரது மனைவி நூதன் கோயலும் கடந்த மார்ச் 2 ஆம் தேதி தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்ட நிலையில் 28 நாள்களுக்குப் பிறகு இன்று தில்லி இதய மற்றும் நுரையீரல் மையத்தில் கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 

கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் 'கோவிஷீல்டு', 'கோவாக்சின்' ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஜனவரி 16 முதல் நாட்டில் இதுவரை 6.11 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

Advertisement

இதன்பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 

இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை . தடுப்பூசிகள் குறித்து இன்னும் நிறைய பேருக்கு சந்தேகம் உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். 

தடுப்பூசி போட்டபிறகு கரோனா தொற்று உறுதியான நபர்கள் சிலரே. அவ்வாறு தடுப்பூசி போட்டபிறகு கரோனா வந்தாலும் அவர்கள் எளிதாக தொடரிலிருந்து மீண்டுவிடுகின்றனர். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

இப்போது கரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டில் 430 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. கரோனா பரவலைக் குறைக்க தடுப்பூசி பயன்பாடும் தீவிரப்படுத்தப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments