முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 27,918 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 27,918 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 27,918 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,73,436 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,820 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 23,77,127 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

மேலும் 139 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 54,422 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 3,40,542 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments