இந்தியா

கரோனாவுக்கு பெற்றோரை இழந்த பிள்ளைகள்; உறவினர்களிடம் சேர்த்த தில்லி போலீஸ்

DIN

புது தில்லி: கரோனாவின் கோரத் தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாமல் அவதிப்படும் மக்களுக்கு தில்லி காவல்துறை தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறது.

உணவு தேவைப்படுவோருக்கு உணவளித்தல், ஆக்ஸிஜன் தேவையை விரைவாக பூர்த்தி செய்தல், கரோனாவால்  உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வது போன்ற பல பணிகளில் தில்லி காவல்துறை செய்து வருகிறது.

தற்போது அதையும் தாண்டி, கரோனாவுக்கு பெற்றோரை இழந்த சகோதரி, சகோதரனை அவர்களது உறவினர்களிடம் சேர்ப்பித்துள்ளனர்.

இது குறித்து தில்லி காவல்துறை உதவி ஆணையர் அதுல் குமார் தாகூர் கூறுகையில், சிஆர் பார்க் பகுதியில் இருந்த இரண்டு பேர் குறித்து எங்களுக்குத்  தகவல் கிடைக்கப் பெற்றது. அவர்களது பெற்றோர் கரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டனர்.

சஞ்சீவ் புகென் (53) ஏப்ரல் 28ஆம் தேதி கரோனாவுக்கு பலியாக, அவரது மனைவி மோமி (45) ஏப்ரல் 29ல் உயிரிழந்தார். அவர்களது பிள்ளைகள் சன்மிதா (20), அர்னாப் (18) ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

அவர்களது நண்பர்கள் மூலம் காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலில், பெற்றோரை இழந்து விரக்தியில் இருக்கும் இருவரும் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் விரைந்துச் சென்று அவர்களை மீட்டனர். அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. இருவரும் சாப்பிட 3 அல்லது 4 நாள்களாக எதுவும் இல்லாமல் பட்டினியில் இருந்துள்ளனர்.

உடனடியாக அவர்களுக்கு உணவு மற்றும் பழச்சாறுகள் வழங்கப்பட்டு உடல்நலன் மீண்டும், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அவர்களது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, இவர்களை பராமரிக்குமாறு கூறி உறவினர்களிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT