முகப்பு
இந்தியா

காசியாபாத்தில் கரோனாவில் இருந்து மீண்ட பிறந்து 8 நாளேயான குழந்தை

காசியாபாத்தில் பிறந்து 8 நாளேயான குழந்தை கரோனாவில் இருந்து மீண்டது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
கோப்புப்படம்.
பகிர்:

காசியாபாத்தில் பிறந்து 8 நாளேயான குழந்தை கரோனாவில் இருந்து மீண்டது. 
உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு வீட்டிற்கு சென்ற பெண்ணிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. 
கரோனா பரிசோதனையில் பெண் மற்றும் அவரது குழந்தைக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 15 நாள்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு அந்த குழந்தை கரோனாவில் இருந்து மீண்டது. 
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 34,372 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 332 பேர் பலியானார்கள். தற்போதைய நிலவரப்படி 3,10,783 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.