இந்தியா

குஜராத் தீ விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

IANS

குஜராத், பருச்சில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் தெரிவித்ததாவது, 

மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 190 கி.மீ தூரத்தில் உள்ள பருச்-ஜம்புசார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள படேல் வெல்ஃபர் அறக்கட்டளை கரோனா மருத்துவமனையில் உள்ள ஐசியூ பிரிவில் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த பயங்கர தீ விபத்தில் 16 கரோனா நோயாளிகள், 2 செவிலியர்கள் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

முதல்வர் விஜய் ரூபானி தீ விபத்து குறித்துப் பார்வையிட இரண்டு மூத்த அதிகாரிகளை நியமித்தார். மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருகின்றது. 

மேலும், முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ரூ .4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ரூபானி கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

SCROLL FOR NEXT