இந்தியா

18 வயது மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி: உ.பி.யில் இன்று தொடங்கியது

ANI

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை உத்தரப் பிரதேச மாநில முதல்வர் இன்று முதல்கட்டமாக தொடங்கி வைத்தார். 

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதற்காக கடந்த 28-ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 2.45 கோடிக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், 

18 முதல் 44 வயதுக்குள்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளோம். ஏற்கெனவே, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.

மேலும் மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட லக்னௌ, பிரயாகராஜ், வாரணாசி, கோராபூர், பரேலி, கான்பூர் மற்றும் மீரட் ஆகிய ஏழு மாவட்டங்களில் தனித்தனி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளனர். 

மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிக்காக 2,500 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பல மாநிலங்களில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று தொடங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலின் தாக்கம்: வெறிச்சோடிய சாத்தனூா் அணை பூங்கா

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா

அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை

கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

கிரேன் கயிறு அறுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT