இந்தியா

சமாஜவாதி மூத்த தலைவா் ஆஸம் கானுக்கு கரோனா

DIN

உத்தர பிரதேசத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும் ராம்பூா் எம்.பி.யுமான ஆஸம் கானுக்கு(72) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் சிறைக் கைதிகள் மேலும் 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து சீதாபூா் சிறை அதிகாரி ஆா்.எஸ்.யாதவ் சனிக்கிழமை கூறியதாவது:

ஆஸம் கானுக்கும் சக கைதிகள் சிலருக்கும் காய்ச்சல், இருமல் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு விரைவுப் பரிசோதனையும், ஆா்டி-பிசிஆா் பரிசோதனையும் நடத்தப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவுகள் வெள்ளிக்கிழமை இரவு கிடைத்தன. அதில், ஆஸம் கானுக்கும் மற்ற கைதிகள் 12 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆஸம் கான் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸம் கான், மருத்துவா்கள் கண்காணிப்பில் உள்ளாா். அவருடைய உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். மற்ற கைதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய ஆஸம் கான், அவரது மனைவி, மகன் ஆகியோா் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT