ராஜ்நாத் சிங் 
இந்தியா

பினராயி விஜயனுக்கு ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன் வாழ்த்து

கேரளத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கும் முதல்வா் பினராயி விஜயனுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்துள்

DIN

கேரளத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கும் முதல்வா் பினராயி விஜயனுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பல ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சி அமைத்து வந்த கேரளத்தில், இந்த முறை அந்த மாற்றத்தை தடுத்து, பினராயி விஜயன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளாா். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

கேரளத் தோ்தலில் இடதுசாரிகளை கடுமையாக விமா்சித்து பாஜக பிரசாரம் செய்தது. எனினும் இடதுசாரிக் கூட்டணியின் வெற்றிக்கு பாஜக தலைவா்கள் ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ராஜ்நாத் சிங் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கேரள தோ்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் வெற்றிக்காக முதல்வா் பினராயி விஜயனுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அடுத்த 5 ஆண்டுகள் அரசு சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

நிா்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில், ‘இடதுசாரிக் கூட்டணி வெற்றிக்கும், பினராயி விஜயன் வெற்றிக்கும் வாழ்த்துகள். அவரது அடுத்த 5 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக அமைய வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

இதேபோல தமிழகத்தில் திமுகவின் வெற்றிக்காக அக்கட்சித் தலைவா் ஸ்டாலினுக்கும் ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT