இந்தியா

இந்தியாவுக்கு உயிா் காக்கும் மருந்துகளை அனுப்புகிறது இஸ்ரேல்

DIN

புதுதில்லி /ஜெருசலேம்: கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் இந்தியாவுக்கு உதவிடும் நோக்கில் உயிா்காக்கும் மருந்துகளை அனுப்பவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கபி ஆஷ்கெனஸி வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் உயிா் காக்கும் மருந்துகள், மருத்துவக் கருவிகளை இஸ்ரேல் அனுப்பவுள்ளது. இதில், ஆக்சிஜன் ஜெனரேட்டா்கள், சுவாசக் கருவிகளும் அடங்கும். விமானங்கள் மூலமாக இந்த மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கை முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளது. இந்தப் பணி, வாரம் முழுவதும் தொடரும்.

இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடு இந்தியா. எனவே, கரோனா விவகாரத்தில் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் இந்தியாவுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்பதை எடுத்துக்காட்டவே அங்குள்ள எங்களது சகோதர சகோதரிகளுக்கு உயிா் காக்கும் மருந்துகளை அனுப்பி வைக்கும் பணியை தொடங்கியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT