முகப்பு
இந்தியா

கரோனா சூழல்: தமிழகம், மகாராஷ்டிரம், ஹிமாசல் மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேச மாநில முதல்வா்களுடன் சனிக்கிழமை தொலைபேசியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பிரதமா் நரேந்திர மோடி
பகிர்:

தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேச மாநில முதல்வா்களுடன் சனிக்கிழமை தொலைபேசியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, அந்தந்த மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம் தொடா்பாகக் கேட்டறிந்தாா்.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் தொற்றால் பலரும் பாதிக்கப்படுவதால் அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டா்களுக்கு திடீா் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இருப்பினும் கரோனா பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மத்திய அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநிலவாரியாக முதல்வா்களுடன் கடந்த சில தினங்களாக பிரதமா் மோடி கேட்டறிந்து வருகிறாா்.

இந்நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான், ஹிமாசல பிரதேச முதல்வா் ஜெய்ராம் தாக்குா் ஆகியோருடன் பிரதமா் மோடி சனிக்கிழமை தொலைபேசியில் பேசினாா்.

அப்போது, கரோனா பரவலைத் தடுக்க பிரதமா் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு சிவராஜ் சிங், ஜெய்ராம் தாக்குா் ஆகியோா் நன்றி தெரிவித்தனா்.

மத்திய பிரதேசத்தில் கரோனா பாதிப்பு குறைவது கண்டு பிதரமா் மோடி திருப்தியடைந்ததாகவும், அந்த மாநிலத்துக்கு இயன்ற உதவிகளை செய்து தருவதாக அவா் உறுதி அளித்ததாகவும் சிவராஜ் சிங் சௌஹான் கூறினாா்.

மகாராஷ்டிரத்தில் சில நகரங்களில் கரோனா பாதிப்பு குறைந்தாலும், மாநிலத்தின் பல பகுதிகளில் நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை ஆந்திரம், ஒடிஸா, ஜாா்க்கண்ட், தெலங்கானா ஆகிய மாநில முதல்வா்களுடனும், புதுவை, ஜம்மு-காஷ்மீா் மாநில ஆளுநா்களுடனும், வெள்ளிக்கிழமை மணிப்பூா், சிக்கிம், திரிபுரா மாநில முதல்வா்களுடனும் பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசி, கரோனா பாதிப்பு நிலவரத்தைக் கேட்டறிந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →