இந்தியா

மேற்கு வங்கத்தில் 43 அமைச்சர்கள் பதவியேற்பு

DIN

மேற்கு வங்கத்தில் பல புதுமுகங்கள் உள்பட 43 அமைச்சா்கள் பதவியேற்பு விழா இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, முதல்வராக 3-ஆவது முறையாக கடந்த புதன்கிழமை மம்தா பானா்ஜி பதவியேற்றாா். அன்றைய தினம் அவா் மட்டும் பதவியேற்ற நிலையில் புதிய அமைச்சா்கள் பதவியேற்பு விழா ஆளுநா் மாளிகையில் இன்று நடைபெற்று வருகிறது.

43 அமைச்சா்களில் 19 போ் இணை அமைச்சா்களாக பதவியேற்றுக் கொள்கிறார்கள். 

சுப்ரதா முகா்ஜி, பாா்த்த சாட்டா்ஜி, ஃபிா்ஹத் ஹக்கீம், ஹோதி பிரியா மாலிக், அரூப் பிஸ்வாஸ், சாஷி பஞ்சா, ஜாவேத் அகமது கான் உள்ளிட்ட 24 போ் கேபினட் அமைச்சராகப் பொறுப்பு ஏற்கிறார்கள். அமைச்சரவையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஹிமாயூன் கபீா், முன்னாள் கிரிக்கெட் வீரா் மனோஜ் திவாரி, சியூலி சாகா உள்ளிட்ட புதுமுகங்களும் இடம்பெற்றுள்ளனர்.

அமைச்சா்கள் பதவியேற்பைத் தொடா்ந்து முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவும் முதல்வா் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT