இந்தியா

மத்திய அரசு செலவினங்களில் கரோனா தடுப்பூசி இடம் பெறவில்லையா? நிதியமைச்சகம் விளக்கம்

DIN

புது தில்லி: மத்திய அரசு செலவினங்களில் கரோனா தடுப்பூசி இடம் பெறவில்லை என்பது உண்மையில்லை என்று மத்திய  நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் செலவினங்களில் கரோனா தடுப்பூசி இடம்பெறவில்லை என்று வெளியான தகவலுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் செலவினங்களில் கொவிட்- 19 தடுப்பூசி இடம் பெறவில்லை என்பது உண்மையல்ல. மானியக் கோரிக்கைகள் எண் 40ன் கீழ் ‘மாநிலங்களுக்கான மாற்றல்' என்ற தலைப்பில் ரூ. 35,000 கோடி இடம்பெற்றுள்ளது. இந்தக் கணக்கின் கீழ் மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, தொகையை வழங்கி வருகிறது.

இதைப் பயன்படுத்துவதினால் ஏராளமான நிர்வாக பலன்கள் கிடைக்கின்றன. முதலாவதாக சுகாதார அமைச்சகத்தால் நிதி உதவி வழங்கப்படும் மத்திய அரசின் பிற திட்டங்களைப் போல் அல்லாமல் தடுப்பூசிக்கான செலவுகள் பிரத்தியேக நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுவதால் இவற்றின் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு எளிதாகிறது.

மேலும் பிற கோரிக்கைகளுக்குரிய காலாண்டு செலவு கட்டுப்பாட்டு வரையறைகளில் இருந்து இந்த மானியத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசித் திட்டம் தங்குத்தடையின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய இது உதவியாக இருக்கிறது.

சுகாதார அமைச்சகத்தின் மேற்பார்வையில் தடுப்பூசிகளுக்கான தொகை வழங்கப்படுகிறது. மாநிலங்களுக்கு தடுப்பூசிகள், மானியம் போன்று வழங்கப்படுவதுடன் தடுப்பூசிகளின் நிர்வாகத்தை மாநிலங்களே மேற்கொள்கின்றன.

இவ்வாறு அளிக்கப்படும் திட்டத்தை மாற்றியமைப்பதற்கான போதிய நிர்வாக நெகிழ்வுத் தன்மையும் இடம்பெற்றுள்ளன. எனவே தடுப்பூசிக்கான போதிய நிதியின் இருப்பை உறுதி செய்வதற்கு, “நிதி ஒதுக்கீடு பெரும் பொருட்டல்ல”. ‘மாநிலங்களுக்கான மாற்றல்’ என்று தலைப்பிடப்பட்டிருப்பதால், மத்திய அரசால் செலவினங்களை ஏற்க முடியாது என்பது பொருளல்ல என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT