முகப்பு
இந்தியா

ம.பி.யில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. புதிதாக 9,715 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:12 PM
ம.பி.யில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. புதிதாக 9,715 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்தியப் பிரதேசத்தில் புதிதாக 9,715 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 84 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,501-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 7,324 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 5,63,754-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,11,223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.