கோவேக்ஸின் நாளையுடன் தீர்ந்துவிடும்: தில்லி சுகாதாரத் துறை
ஒரு நாளுக்குத் தேவையான கோவேக்ஸின் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், நாளையுடன் தடுப்பு மருந்து தீர்ந்துவிடும் எனவும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளுக்குத் தேவையான கோவேக்ஸின் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், நாளையுடன் தடுப்பு மருந்து தீர்ந்துவிடும் எனவும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''கேவேக்ஸின் தடுப்பு மருந்து இருப்பு ஒரு நாளுக்கு தேவையான அளவு மட்டுமே உள்ளது. கோவிஷீல்டு தடுப்பு மருந்து 3 முதல் 4 நாள்களுக்கு இருப்பு உள்ளது. தற்போது கரோனா தடுப்பு மருந்து தேவை அதிகரித்துள்ளது. இதனால், உடனடியாக மத்திய அரசு கரோனா தடுப்பு மருந்தை வழங்க வேண்டும்'' என்று கூறினார்.
தில்லிக்கு கரோனா தடுப்பு மருந்து ஒதுக்கீடை அதிகரிக்குமாறு நேற்று மத்திய அரசுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.