முகப்பு
இந்தியா

தில்லியில் மேலும் 13,287 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் புதிதாக 13,287 பேருக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
தில்லியில் மேலும் 13,287 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

தில்லியில் புதிதாக 13,287 பேருக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்கு 13,287 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை மொத்தம் 13,61,986 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 300 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் 20,310 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 14,071 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளதை அடுத்து மொத்தம் 12,58,951 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

நோய் பாதித்த 82,725 பேர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.