இந்தியா

'உலக அளவிலான கரோனாவில் இந்தியாவில் 50% பாதிப்பு'

DIN

கடந்த ஏழு நாள்களில் உலக அளவிலான கரோனா பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 50 சதவிகிதம் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், கடந்த ஏழு நாள்களில் உலக அளவிலான கரோனா இறப்பில் இந்தியாவில் 30 சதவிகிதம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக பதிவான கரோனா பாதிப்புகள் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில், தெற்காசியாவில் இந்தியாவில் அதிக அளவில் கரோனா பாதிப்பு பதிவாகி வருவது தெரியவந்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி அதன் அண்டை நாடுகளிலும் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கரோனா குறைந்து வரும் நிலையில்,
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 9-வது வாரமாக கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 31 லட்சம் நிலம் மோசடி: 2 பேர் கைது

இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

SCROLL FOR NEXT