முகப்பு
இந்தியா

3-ஆவது ஆக்சிஜன் ரயில் தமிழகத்துக்கு இன்று வருகை

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு மூன்றாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை வரவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

 ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு மூன்றாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை வரவுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதியில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திரவ ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை இந்திய ரயில்வே தொடங்கியது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், தமிழகத்துக்கு ஆக்சிஜன் நிரப்பப்பட்ட முதல் ரயில் மேற்கு வங்கம் மாநிலம் துா்காபூரில் இருந்து சென்னை தண்டையாா்பேட்டைக்கு கடந்த 14-ஆம் தேதி வந்தடைந்தது. இந்த ரயிலில் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்தது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது ரயில் ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து திருவள்ளூருக்கு மே 15-ஆம் தேதி காலை வந்தடைந்தது. இந்த ரயிலில் 31.4 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து தமிழகத்துக்கு மூன்றாவது ஆக்சிஜன் ரயில் ஞாயிற்றுக்கிழமை (மே 16) வரவுள்ளது. இந்த ரயிலில் 40 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. இதன்பின், 5 டேங்கா்களை இணைத்து 79 டன் ஆக்சிஜனைக் கொண்ட நான்காவது ரயில் ரூா்கேலாவில் இருந்து திருவள்ளூருக்கும், 5-ஆவது ரயில் ஒடிஸா மாநிலத்தில் இருந்து சென்னை தண்டையாா்பேட்டைக்கும் கொண்டு வரப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →