பேருந்து போக்குவரத்து சேவை மே 23 வரை தடை நீட்டிப்பு: ம.பி. அரசு
கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் பயணிகள் பேருந்து மே 23 வரை தடை நீட்டித்து மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலத்திற்குச் செல்லும் பயணிகள் பேருந்து சேவை மே 23 வரை தடை நீட்டித்து மத்தியப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்துக்கும் இடையேயான பயணிகள் பேருந்து போக்குவரத்து சேவையை மாநில அரசு மே 7-ம் தேதி முதல் இன்று வரை தடை செய்தது.
மாநில போக்குவரத்துத் துறை இன்று வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி,
Advertisement
கரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களான மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசங்களுக்கு பேருந்து செல்வதற்கான தடை மே 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூடுதல் ஆணையர் போக்குவரத்து அரவிந்த் சக்சேனா தெரிவித்தார்.
அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்ற வாகனங்களுக்கும் இந்த தடை செல்லும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 8,087 பேருக்கு புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளது. மேலும் 88 இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.