முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 21 ஆயிரம் பேருக்கு கரோனா

​கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,402 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,402 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியது:

"கேரளத்தில் புதிதாக 21,402 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 87 பேர் பலியானது கண்டறியப்பட்டதையடுத்து, மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கான மொத்த பலி எண்ணிக்கை 6,515 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 99,651 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,00,179 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 86,505 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன."

இதைத் தொடர்ந்து தடுப்பூசி கொள்முதல் குறித்து பினராயி விஜயன் கூறுகையில், "உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி மூலம் சந்தையிலிருந்து 3 கோடி கரோனா தடுப்பூசிகளை கேரள அரசு வாங்கவுள்ளது. இதற்கானப் பணிகள் இன்று தொடங்கவுள்ளன" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.