முகப்பு
இந்தியா

காங்கிரஸ் நிவாரணக் குழு புதன்கிழமை கூடுகிறது

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள காங்கிரஸ் அமைத்துள்ள நிவாரணக் குழு புதன்கிழமை காணொலி வாயிலாகக் கூடுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
கோப்புப்படம்
பகிர்:


கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள காங்கிரஸ் அமைத்துள்ள நிவாரணக் குழு புதன்கிழமை காணொலி வாயிலாகக் கூடுகிறது.

இந்தக் கூட்டத்துக்கு முன்பாக கட்சியின் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் தொண்டர்களுக்கு செய்தி விடுத்துள்ளார். அதில், "தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நாம் மே 17-ம் தேதி தொடங்குகிறோம். உங்கள் பகுதிகளிலுள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குப் பதிவு செய்ய தொண்டர்கள் உதவ வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கடந்த 11-ம் தேதி அமைத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.