சத்தீஸ்கரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் காயம்
சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உதய்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கும்கா கிராமத்திற்கு அருகே 32 பேருடன் தனியார் பேருந்து ராய்ப்பூரிலிருந்து கர்வா (ஜார்கண்ட்) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூடுதல் காவல் ஆணையர் சுனில் சர்மா கூறியுள்ளார்.
பேருந்து ஓட்டுநர் பேருந்தைத் திருப்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததால், பேருந்து சாலையோர பள்ளத்தில் விழுந்துள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.
Advertisement
காயமடைந்த 16 பேர் உதய்பூரில் உள்ள ஒரு சமூக சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர், படுகாயமடைந்த 4 பேர் மாவட்ட மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.