மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: முதல்வர்
மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநிலம் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநிலம் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நெருக்கடிகள் மகாராஷ்டிராவுக்கு புதியதல்ல, இந்த நெருக்கடிகளைத் திசைதிருப்பும் அரசு உலகிற்கு புதியத்தல்ல. டவ்-தே புயலினால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து தப்பிக்க அரசு வழியை கண்டுபிடித்துள்ளது.
கரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளை மகாராஷ்டிரா கட்டுப்படுத்தியுள்ளது. கடந்தாண்டு ஏற்பட்ட நிசர்கா சூறாவளி புயலை தோற்கடித்தது.
Advertisement
இப்போது, மகாராஷ்டிரா டவ்-தே சூறாவளி நெருக்கடியிலிருந்து வெற்றிகரமாக ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
திங்களன்று, மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு 26,616 ஆக பதிவாகியுள்ளன, இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,05,068 ஆகவும், ஒரேநாளில் 516 பேர் இறந்துள்ள நிலையில், மொத்தம் 82,486 தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.