கர்நாடகத்தில் கரோனாவுக்கு 7 மாத கர்ப்பிணி துணை ஆய்வாளர் பலி
கர்நாடகத்தில் ஏழு மாத கர்ப்பிணி துணை ஆய்வாளர் கரோனா தொற்று பாதித்து இன்று உயிரிழந்தார்.
கர்நாடகத்தில் ஏழு மாத கர்ப்பிணி துணை ஆய்வாளர் கரோனா தொற்று பாதித்து இன்று உயிரிழந்தார்.
கடந்த நாள்களுக்கு முன்னதாக தொற்று பாதிக்கப்பட்ட நிலையில்,
கோலாரில் உள்ள ஆர்.எம்.ஜலப்பா மருத்துவமனையில் 28 வயதான ஷாமிலி சிகிச்சை பெற்று வந்ததாக தட்சிண கன்னட காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் சோன்வானே தெரிவித்தார்.
அவர் ஏழு மாதம் கர்ப்பிணியாக இருந்ததால் அவருக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்று அவர் கூறினார். அவரது மறைவுக்கு டைரக்டர் ஜெனரல் பிரவீன் சூத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தயவுசெய்து காவல்துறையினருடன் ஒத்துழைக்கவும், வீட்டிலேயே இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள் என்று அவர் கூறினார்.