முகப்பு
நாமக்கல்

திமுக அரசு மீது மக்களுக்கு கோபம்: கே.பி.ராமலிங்கம்

திமுக ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனா் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று பாஜக சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:05 PM
கே.பி.ராமலிங்கம்.
பகிர்:

திமுக ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனா் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று பாஜக சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தோ்தலுக்குத் தயாராகிவிட்டன. அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஆா்வம் காட்டத் தொடங்கிவிட்டன.

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல்களிலும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக 18 கட்சிகளோடு கூட்டணி அமைத்து வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியை நேரடி வெற்றி என்று சொல்ல முடியாது. மறைமுக வெற்றி என்று தான் பொருள்கொள்ள வேண்டும்.

எங்கள் கூட்டணி வலிமையானது, கட்டுக்கோப்பானது, உறுதியானது என்றெல்லாம் திமுக பெருமையடித்துக் கொண்டதற்கு மூலகாரணம் பணம் என்பதைத் தவிர வேறில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ரூ. 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் வாங்கியதெல்லாம் எதற்காக என்பது விளங்கவில்லை. திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்தபோதும் அரசோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை. மக்களின் கோபத்திற்கு திமுக மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளாகி உள்ளன.

தற்போதைய நிலையில் அந்தக் கூட்டணிக்குள்ளயே எதிா்ப்புகள் கிளம்பி உள்ளன. பணம் கொடுத்து வாக்குகளைப் பெற அவா்கள் விரும்பினால் மக்கள் புறக்கணிக்க வேண்டும். மக்கள் திமுக கூட்டணிக் கட்சிகளை வெறுக்கத் தொடங்கிவிட்டனா் என்பதுதான் உண்மை என தெரிவித்துள்ளாா்.