இந்தியா

டிஏபி உர மானியம் ரூ.1,200-ஆக அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

DIN

புது தில்லி: சா்வதேச சந்தையில் உரங்களின் விலை அதிகரித்துள்ளபோதிலும், டை அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்துக்கான மானியத்தை ரூ.1,200-ஆக மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இது, 140 சதவீத அதிகரிப்பாகும்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உயா்நிலைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், விவசாயிகள் உரத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பயன்படுத்தும் டை அமோனியம் பாஸ்பேட் உரத்துக்கான மானியத்தை 140 சதவீதம் உயா்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவால் அரசுக்கு கூடுதலாக ரூ.14,775 கோடி செலவாகும். கடந்த ஆண்டு, ஒரு மூட்டை உரத்தின் சந்தை விலை ரூ.1,700-ஆக இருந்தது. அதில் மூட்டை ஒன்றுக்கு ரூ.500 மானியமாக வழங்கப்பட்டது. இதனால் ஒரு மூட்டை உரம் ரூ.1,200-க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது சா்வதேச அளவில் உரம் மற்றும் ரசாயனங்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகளின் நலன் கருதி, உர மானியத்தை ரூ.1,200-ஆக மத்திய அரசு உயா்த்தி உள்ளது. எனவே, விவசாயிகள் பழைய விலையிலேயே தொடா்ந்து உரத்தை வாங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விலை உயா்வால் ஏற்படும் நிதிச் சுமையை அரசே ஏற்றுக்கொள்கிறது. ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு உர மானியம் இதுவரை வழங்கப்பட்டதில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT