கடந்த 27 நாட்களில் 14 மாநிலங்களுக்கு 16,809 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கல்: ஒடிசா காவல்துறை தகவல்
கரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் ஒடிசா கடந்த 27 நாட்களில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 16,809 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனைக் கொண்ட 919 டேங்கர்களை வழங்கியுள்ளது.
கரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் ஒடிசா கடந்த 27 நாட்களில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 16,809 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனைக் கொண்ட 919 டேங்கர்களை வழங்கியுள்ளது.
கரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் எதிர்பாராத அளவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.
உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 27 நாட்களில் சுமார் 16,809 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்ற 919 டேங்கர்கள் ஒடிசாவிலிருந்து 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது.
1,335.942 மெட்ரிக் டன்களுடன் அங்கூலில் இருந்து 83 டேங்கர்களும், 3964.23 மெட்ரிக் டன்களுடன் தெங்கனலில் இருந்து 248 டேங்கர்களும், ஜஜ்பூரிலிருந்து 4717.877 மெட்ரிக் டன்களுடன் 232 டேங்கர்களும், ரூர்கேலாவிலிருந்து 6788.994 மெட்ரிக் டன்களுடன் 356 டேங்கர்களும் அனுப்பப்பட்டது.
இதில், மொத்தம் 282 டேங்கர் மருத்துவ ஆக்ஸிஜன் ஆந்திரத்துக்கும் 236 டேங்கர்கள் தெலங்கானாவிற்கும் 131 டேங்கர் ஆக்ஸிஜன் ஹரியானாவிற்கும், 61 டேங்கர் மத்தியப் பிரதேசத்திற்கும், 52 உத்தரப்பிரதேசத்திற்கும், 22 தில்லிக்கு, 3 டேங்கர்கள் பிகாருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கண்காணிப்பு மூலம் உடனடி மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது, இதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு எந்தவித தாமதமும் இல்லாமல் சேவை செய்ய முடியும் என்றும் ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது.