இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் முதல் நபருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு 

IANS

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அரசு கல்லூரி மருத்துவமனையில் முதல் நபருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோயும் அச்சுறுத்தி வருகிறது. கருப்பு பூஞ்சை நோய் அதிகளவில் நீரிழிவு நோயாளிகளை தாக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நுண்ணுயிரியல் துறையின் தலைவர் சாஷி சோடன் தெரிவித்தார். 

இதுவே ஜம்மு-காஷ்மீரில் பாதித்த முதல் வழக்கு என்று அவர் தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். நோயாளியின் உயர் இரத்த சர்க்கரை அளவு (900 மி.கி / டி.எல்) இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும்,  தினசரி இறப்புகளின் எண்ணிக்கை அதிகாரிகளுக்கு கடுமையான சவாலாக மாறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT