இந்தியா

உ.பி.யில் ஒருவருக்கு வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு 

IANS

நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சையை தொடர்ந்து வெள்ளை பூஞ்சை நோய் பரவி வருகிறது.  

வடமாநிலங்களில் நோய்த் தொற்று பரவலாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மௌவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வெள்ளை பூஞ்சை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது கருப்பு பூஞ்சை நோயை விடக் கொடியது என கூறப்படுகிறது. இந்த வெள்ளை பூஞ்சை நோயானது நுரையீரல் தொற்று ஏற்பட காரணம் ஆகிறது. இதுதவிர, தோல், நகங்கள், வாயின் உள்புற பகுதி, வயிறு, குடல், இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் மூளை உள்ளிட்ட உடல்பாகங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.

கடந்த ஏப்ரல் மாதம் தில்லி மருத்துவமனையில் கரோனாவுக்கு முன்னர் சிகிச்சை பெற்ற 70 வயதுடைய நபருக்கு வெள்ளை பூஞ்சை கண்டறியப்பட்டது. பின்னர் அவர் குணமடைந்ததைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்டார்.

கரோனாவிலிருந்து மீண்டதைத் தொடர்ந்து அவர் கண் பார்வையை இழந்துள்ளார். பின்னர் பயாப்ஸியைத் தொடர்ந்து அவருக்கு வெள்ளை பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

வெள்ளை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கரோனா போன்ற அறிகுறிகள் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பரிசோதனையில் எதிர்மறை என்றே காட்டுகின்றது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT