முகப்பு
இந்தியா

வெளிநாட்டு உதவி மூலம் மாநிலங்களுக்கு 16,530 ஆக்சிஜன் செறிவூட்டிகள்: மத்திய அரசு

வெளிநாட்டு உதவிகள் மூலம் மாநிலங்களுக்கு 19 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், 16,530 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,901 ஆக்சிஜன் உருளைகள், 6.6 லட்சம் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகள் வழங்கப்பட்டிருக்கின்றன

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

வெளிநாட்டு உதவிகள் மூலம் மாநிலங்களுக்கு 19 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், 16,530 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,901 ஆக்சிஜன் உருளைகள், 6.6 லட்சம் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில், கரோனா தடுப்பூசி, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்தன. அதனைத் தொடா்ந்து பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் உதவி வருகின்றன. இவ்வாறு பெறப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களை மத்திய அரசு மாநிலங்களுக்கு விநியோகித்து வருகிறது. அந்த விவரங்களையும் மத்திய அரசு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முறையாக திட்டமிட்டு விரைந்து விநியோகிக்கும் பணியை பல்வேறு அமைச்சகங்களும், துறைகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

அதன் மூலம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த ஏப்ரல் 27 முதல் மே மாதம் 21-ஆம் தேதி வரை 16,530 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15,901 ஆக்சிஜன் உருளைகள், 19 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், 11,416 சுவாசக் கருவிகள், 6.6 லட்சம் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →