லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவு
லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.
லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்ததாவது,
கார்கில் மாவட்டத்தில் இன்று காலை 8.37 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது. இது 40 கி.மீ ஆழத்திலும், நிலைக்கொண்டுள்ளது.
மேலும் விவரங்கள் எதிர்ப்பார்க்கப்படுவதாக மையம் தெரிவித்துள்ளது.