இந்தியாவில் ஒரேநாளில் 20.66 லட்சம் கரோனா பரிசோதனைகள்
இந்தியாவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 20.66 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இந்தியாவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 20.66 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இது நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மிக அதிக அளவு மற்றும் உலக சாதனையாகும்.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில்,
தொடர்ந்து நான்காவது நாளாக 20 லட்சத்துக்கு மேற்பட்ட சோதனைகள் நடத்தியுள்ளது இந்தியா. மேலும், 27,76,936 முகாம்களில் 19,33,72,819 தடுப்பூசி மருந்துகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன.
Advertisement
இவர்களில் முதல் டோஸாக 97,38,148 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இரண்டாவது டோஸாக 66,91,350 பேரும் எடுத்துள்ளனர்.
மேலும் 1,48,70,081 முன்னணி தொழிலாளர்கள் முதல் டோஸையும், 83,06,020 பேர் இரண்டாவது டோஸையும் செலுத்திக்கொண்டனர்.
18-44 வயதுக்குள்பட்ட 92,97,532 பேர் முதல் டோஸ் எடுத்துள்ளனர்.
45-60 வயதுக்குள்பட்ட 6,02,11,957 பேருக்கு முதல் டோஸ் மற்றும் 96,84,295 பேர் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டோர் 5,63,83,760 பேர் முதல் டோஸையும் 1,81,89,676 இரண்டாவது டோஸையும் எடுத்துள்ளனர்.
இந்தியாவின் மருத்துவச் சிகிச்சையில் 29,23,400 பேர் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3,57,630 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, ஒட்டுமொத்த மீட்டெடுப்புகள் 2,30,70,365-ஐ எட்டியுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.