மாநிலங்களிடம் 1.60 கோடி கரோனா தடுப்பூசிகள் இருப்பு: சுகாதாரத் துறை
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1,60,13,409 கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1,60,13,409 கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. அடுத்த 3 நாள்களில் 2.67 லட்சத்துக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அனைத்து, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை சுமாா் 21 கோடிக்கும் அதிகமான (21,33,74,720) கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. அதில், சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, பல்வேறு வழிகளில் வீணானவை உள்பட 19,73,61,311 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் தற்போது 1,60,13,409 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் 2,67,110 கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.