அசாமில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாநில காவல்துறை - பாதுகாப்புப்படை நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:47 AM
அசாம் மாநிலம் கவுகாத்தியில் மாநில காவல்துறை - பாதுகாப்புப்படை நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அசாம் மாநிலம் கர்பி-ஆங்லாங் மாவட்டத்தில் அசாம் காவல்துறை-பாதுகாப்புப்படை இணைந்து நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் தேசிய திமாஷா புரட்சிப் படையை சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து அதிக அளவிலான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement