இளைஞரை கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் (விடியோ)
சத்தீஸ்கர் மாநிலத்தில் இளைஞர் ஒருவரை பொது இடத்தில் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இளைஞர் ஒருவரை பொது இடத்தில் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதைடுத்து சுராஜ்புர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மா சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இளைஞரொருவர் மருந்து சீட்டு ஒன்றுடன் வெளியே வந்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர் அந்த மருந்துச் சீட்டை காட்டியுள்ளார். பின்னர் அவர் போலி ரசீதுடன் சுற்றியதாகக் கூறி பொது இடத்தில் வைத்து இளைஞரின் கன்னத்தில் மாவட்ட ஆட்சியர் அறைந்ததுடன் அவரது செல்போனை வாங்கி ரோட்டில் வீசி எறிந்தார்.
இதன் பின்னர் அங்குள்ள காவல் துறையினரிடம் அவரைத் தாக்கும்படி கூறவே, காவல்துறையினரும் அவரை லத்தியால் அடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதை அடுத்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், சுராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மாவை பணியிட மாற்றம் செய்துள்ளார். அவருக்குப் பதிலாக கௌரவ குமார் சிங்கை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.