இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 2,22,315 பேருக்கு கரோனா; 4,454 பேர் பலி

DIN

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,22,315 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 2,22,315 ஆகவும், இதன் மூலம் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,67,52,447 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் கரோனா தொற்றால் 4,454 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,03,720  ஆக உயர்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 27,20,716 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றிலிருந்து இன்று 3,02,544 குணமடைந்த நிலையில் இதுவரை 2,37,28,011 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 23 ஆம் தேதி வரை 33,05,36,064 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. நேற்று ஒரேநாளில் 19,28,127 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அதேசமயம் இதுவரை 19,60,51,962 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT