கர்நாடகத்தில் 25,311 பேருக்கு கரோனா
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,311 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,311 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 23.28 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 24,50,215 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 57,333 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 529 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 19,83,948 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 25,811 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 4,40,435 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.