முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 17,821 பேருக்கு கரோனா

​கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,821 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,821 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய அறிவிப்புகளை முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,821 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், 36,039 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 196 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 7,554 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி அங்கு இன்னும் 2,59,179 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.