முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் புதிதாக 22,758 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,758 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
கோப்புப்படம்
பகிர்:


கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,758 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டோர் விகிதம் 21.13 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. இதுவே நேற்றைய தினம் (திங்கள்கிழமை) 23.28 சதவிகிதமாகப் பதிவானது.

மேலும் 38,224 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 20,22,172 பேர் குணமடைந்துள்ளனர். 

நேற்றைய தினம் 529 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியானதையடுத்து, இன்று 588 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 26,399 ஆக உயர்ந்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி 4,24,381 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.