முகப்பு
இந்தியா

கேரள கடற்கரையில் மீன்பிடி படகு கவிழ்ந்தது: ஒருவர் பலி

கேரளத்தின் விஜின்ஜாம் கடற்கரையில் படகுகள் கவிழ்ந்ததில் மீனவர்கள் சிலர் காணாமல் போனதாகவும், ஒருவர் பலியானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:18 PM
கோப்புப் படம்
பகிர்:

கேரளத்தின் விஜின்ஜாம் கடற்கரையில் படகுகள் கவிழ்ந்ததில் மீனவர்கள் சிலர் காணாமல் போனதாகவும், ஒருவர் பலியானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காற்று காரணமாக படகுகள் கவிழ்ந்ததில், இருவர் மாயமாகியுள்ளனர். இருவரைக் கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.

கடலோர குக்கிராமமான பூந்துராவைச் சேர்ந்த 55 வயதான டேவிட்சனின் சடலம் இன்று காலை ஆதிமலத்துராவிலிருந்து மீட்கப்பட்டதாகக் கடலோர காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

கடலில் மாயமானவர்கள் பூந்துரா மற்றும் கோட்டாபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜோசப் மற்றும் ஷபரியார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இறந்தவர் உள்பட 17 பேரை ஏற்றிச் சென்ற நான்கு படகுகள் கவிழ்ந்துள்ளன. இந்தியக் கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) இதுவரை மொத்தம் எட்டு பேரை மீட்டுள்ளது. மீட்டுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

இதற்கிடையில், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பதனம்திட்டாவின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments