இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 24,752 பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 24,752 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 24,752 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 56,50,907 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 453 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பலியான 453 பேரில் 323 பேர் கடந்த 48 மணி நேரத்தில் பலியானவர்கள். 130 பேர் கடந்த வாரம் பலியானவர்கள். பல்வேறு மாவட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகள் பலி எண்ணிக்கைகளைப் பதிவு செய்யததைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கையில் மேலும் 539 பலி எண்ணிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.  

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 91,341 ஆக உயர்ந்துள்ளது. 

இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு தினசரி குணமடைவோர் எண்ணிக்கை தினசரி பாதிப்பைத் தாண்டி கூடுதலாகப் பதிவாகியுள்ளது. 23,065 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை மொத்தம் 52,41,833 பேர் குணமடைந்துள்ளனர்.   

இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 3,15,042 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT