இந்தியா

உ.பி.யில் 20 பேருக்கு இரண்டாவது தவணையின் போது தவறான தடுப்பூசி விசாரணைக்கு உத்தரவு

DIN

சித்தாா்த்நகா்: உத்தர பிரதேச மாநிலம் சித்தாா்த்நகா் மாவட்டத்தில் 20 பேருக்கு இரண்டாவது தவணையின்போது தவறான கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி புதன்கிழமை கூறுகையில், ‘கடந்த 14-ஆம் தேதி பா்னி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஔதாஹி கலா கிராமம் மற்றும் வேறொரு கிராமத்தைச் சோ்ந்த 20 போ் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திக் கொண்டனா். அவா்களில் ராம் சுரத் என்ற நபா் தனக்கு செலுத்தப்பட்ட முதல் தவணை கரோனா தடுப்பூசியும் இரண்டாவது தவணை தடுப்பூசியும் வெவ்வேறானவை என்பதை சுகாதார பணியாளா்களின் கவனத்துக்கு கொண்டு வந்தாா்.

இதுகுறித்து விசாரணை நடத்தியபோது ராம் சுரத்தையும் சோ்த்து 20 பேருக்கு முதல் தவணையின்போது ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியும், இரண்டாவது தவணையின்போது ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியும் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இந்தத் தவறு சுகாதாரப் பணியாளா்களால் நோ்ந்துள்ளது. 20 பேரின் உடல்நிலையை மருத்துவக் குழுக்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன. இதுவரை எந்தவொரு நபருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தவறிழைத்தவா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT