பயணிகள் வருகை குறைவு: 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே 
இந்தியா

பயணிகள் வருகை குறைவு: 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

பயணிகள் வருகை குறைவாகக் காணப்பட்டதால் 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

DIN

பயணிகள் வருகை குறைவாகக் காணப்பட்டதால் 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தற்போது தீவிரமாகி வருகிறது. இதைத் தடுக்க மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதன்காரணமாக, சிறப்பு ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிா்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துவருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னை சென்ட்ரல் -  மங்களூர் உள்ளிட்ட 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை சென்ட்ரல்-மங்களூர் சிறப்பு ரயில்(06627), கேஎஸார் பெங்களூரு-எர்ணாகுளம் சிறப்பு ரயில்(02677), மதுரை-திருவனந்தபுரம் சிறப்பு ரயில்(06344) உள்ளிட்ட 12 ரயில்கள் ஜூன் 1 முதல் 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக நாடுகள் மீதான டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரம்: தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

பள்ளியில் சமத்துவப் பொங்கல்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் பொங்கல் விழா

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் பேச்சு!

ஜார்க்கண்ட்டில் வெடி விபத்து : 3 பேர் பலி, இருவர் படுகாயம்

SCROLL FOR NEXT