இந்தியா

யாஸ் புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம்: பிகார் அரசு

DIN

பிகாரில் யாஸ் புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிகார் அரசு அறிவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவில் புதன்கிழமை கரையைக் கடந்தது. அப்போது ஒடிசாவின் வடக்குப் பகுதியிலும் மேற்கு வங்கத்திலும் கடலோரப் பகுதிகளில் 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது.

இந்த புயலால் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட், பிகார் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிப்புகளை சந்தித்துள்ளன. 

கனமழையால் பிகாரில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. விவசாய நிலங்களும் வெள்ள நீரில் மூழ்கின. 21 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

புயல் தொடா்பான சம்பவங்களில் 4 போ் உயிரிழந்துவிட்டனா். 

இந்த நிலையில் புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிகார் அரசு அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT