தேவசம்போர்டின் வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியானது 
இந்தியா

தேவசம்போர்டின் வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியானது

கரோனா பெருந்தொற்று காரணமாக திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தால், ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்தது.

IANS

திருவனந்தபுரம்: கரோனா பெருந்தொற்று காரணமாக திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தால், ஆண்டு வருவாய் ரூ.261 கோடியிலிருந்து ரூ.21 கோடியாகக் குறைந்தது.

சபரிமலை உள்பட கேரள மாநிலத்தின் தென் மாவட்டங்களில் உள்ள கோயில்கள் அனைத்தும் திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்தக் கோயில்களிலிருந்து கிடைக்கும் வருவாய் கொண்டு தான் திருவாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஊதியம், ஓய்வூதியம் என ரூ.40 கோடி அளவுக்கு செலவு செய்யப்படுகிறது.

ஆனால், தற்போது கோயில்கள் மூலம் வரும் வருவாய் இல்லாததால், தங்களது செலவுகளை மேற்கொள்ள மாநில அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.

இந்த கோயில்களின் வருவாய் ரூ.261 கோடியிலிருந்து தற்போது ரூ.21 கோடியாகக் குறைந்துள்ளது.  2020-ஆம் ஆண்டிலேயே சபரிமலையில் பக்தர்களின் அனுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால்  கோயில் மூலம் கிடைக்கும் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

சுதந்திரம் சரி, ஜனநாயகம்?

எல்லோருக்கும் நல்லவர்!

மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

SCROLL FOR NEXT