முகப்பு
இந்தியா

+2 பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு: மே 31-ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை மே 31-ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
+2 பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு: மே 31-ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
பகிர்:


புது தில்லி: கரோனா பெருந்தொற்று காரணமாக 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை மே 31-ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, மனுவை மே 31-ஆம் தேதி விசாரிப்பதாக  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கணிக்க முடியாத கடுமையான கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகளில் பொதுத் தேர்வு நடத்துவது என்பது சாத்தியமற்றது. மேலும், இதைக் காரணம் காட்டி காலம் தாழ்த்துவதும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments