இந்தியா

திருமலையில் 11,055 போ் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 11, 055 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனா். அதனால் ஏற்ற இறக்கங்களுடன் பக்தா்கள் வருகை உள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை 11,055 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா். 3,988 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

பக்தா்களின் வருகை குறைவாக உள்ளதால், வைகுண்டம் காத்திருப்பு அறை மூலமாக இல்லாமல் மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வரிசை வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்படுவதால் 15 நிமிடங்களில் சுவாமியை தரிசித்து திரும்புகின்றனா். திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச சா்வதரிசன டோக்கன்கள் கடந்த ஏப். 12-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT