சத்தீஸ்கர்: கரோனாவால் பலியான நக்ஸலைட் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்த காவல்துறை
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் கரோனா பாதித்து உயிரிழந்த நக்ஸலைட்டின் உடலுக்கு சுகாதாரத் துறை ஊழியர்களின் உதவியோடு, காவல்துறையினர் இறுதிச் சடங்குகளை செய்தனர்.
சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் கரோனா பாதித்து உயிரிழந்த நக்ஸலைட்டின் உடலுக்கு சுகாதாரத் துறை ஊழியர்களின் உதவியோடு, காவல்துறையினர் இறுதிச் சடங்குகளை செய்தனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, கங்கா ஆய்தா கோர்சா என்ற நக்ஸலைட் கரோனா பாதித்து தெலங்கானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். உடனடியாக சுக்மா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லை. அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் யாருமே அவரது உடலை வாங்க வரவில்ல. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் சேர்ந்து கோர்சாவின் இறுதிச் சடங்கை நடத்த திட்டமிட்டனர்.
Advertisement
அதன்படி, சுகாதாரத் துறையின் உதவியோடு, சுக்மா காவல்துறையினர், கோர்சாவின் இறுதிச் சடங்கை செய்தனர்.