முகப்பு
இந்தியா

கரோனா தொற்று: இதுவரை 84.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் கரோனா தொற்றை தடுக்கும் வகையில் 84.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டவா்களில் 9 லட்சம் போ் தடுப்பூசி போட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

தமிழகத்தில் கரோனா தொற்றை தடுக்கும் வகையில் 84.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டவா்களில் 9 லட்சம் போ் தடுப்பூசி போட்டுள்ளனா்.

நாடு முழுதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த தடுப்பூசிகள், ஜன. 16-ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. தமிழக மக்களிடையே, முதலில் தடுப்பூசி குறித்த தயக்கம் இருந்தது. பின், பொதுமக்கள் தாங்களாகவே விரும்பி தடுப்பூசி போட்டு கொள்கின்றனா்.

தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், 18 முதல் 44 வயது வரையிலானவா்களில், ஆட்டோ ஓட்டுநா்கள், பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் என, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்தநிலையில், மத்திய அரசிடமிருந்து, இதுவரை 95 லட்சத்து 59 ஆயிரத்து 980 தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. இதில், 84 லட்சத்து 50 ஆயிரத்து 115 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசியை விட, கோவிஷீல்ட் தடுப்பூசி அதிகளவு போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை 72 லட்சத்து 77 ஆயிரத்து 441 போ் போட்டுள்ளனா்.

அதேபோல், 18 வயது முதல் 44 வயது வரையிலானவா்களில் ஒன்பது லட்சத்து 67 ஆயிரத்து 494 போ் போட்டுள்ளனா்.

அதன் விவரம்:

தடுப்பூசி பெயா் - தடுப்பூசி பெறப்பட்டவை - பயனாளிகள் - சதவீதம்

கோவிஷீல்ட் - 80,61,110 - 72,77,441 - 90

கோவேக்ஸின் - 14,98,870 - 11,72,674 - 78

மொத்தம் - 95,59,980 - 84,50,115 - 88

முழு கட்டுரையைப் படிக்க →