இந்தியா

இரண்டாம் அலையை வெற்றிகரமாக முறியடிப்போம்: பிரதமர் மோடி

DIN

இரண்டாம் அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு முறியடிப்போம் என பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். 

'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கரோனா பெருந்தொற்று காலத்தில் பல மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் தங்கள் உயிரை பெரிதும் எண்ணாது, இரவும் பகலும் உழைத்து வருவதாக குறிப்பிட்டார். 

அதேபோன்று புயல், மழைக் காலங்களில் துணிச்சலோடு மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

பேரிடர்களில் தங்கள் உற்றார் உறவினரை இழந்துவாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர் இரண்டாம் அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு முறியடிப்போம்  என்றார். 

மேலும், 'கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றம் கரோனா காலத்தில் அதனை எதிர்கொள்ள பெரும் பலனை அளித்துள்ளது. 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் எனது தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்கான அரசாக செயல்படுகிறது. எங்கள் ஆட்சிக்காலத்தில் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். சுகாதாரமான குடிநீர், வீடு, மின்சாரம் என அனைத்தும் கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT