கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 3ஆம் தேதி தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்திய வானிலை அறிகுறிகளின் படி, தென் மேற்குப் பருவக்காற்று ஜூன் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக வலுவடைந்து கேரளத்தில் மழைப் பொழிவை அதிகரிக்கும் என தெரிகிறது.
ஆகையால், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது.
அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் கர்நாடக கடலோர பகுதிக்கு மேலே 3.1 கி.மீ தொலைவில் புயல் சுழற்சி காணப்படுகிறது. இந்த புயல் சுற்று தமிழகம் மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 5.8 மற்றும் 7.6 கி.மீ உயரத்தில் உள்ளது.
வட மாநிலங்கள் பலவற்றில் ஒரு சில இடங்களில், இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசும் எனவும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துளளது.